தமிழகம் வெளிநாட்டவர்களின் வேட்டைக்காடா?

“பாரதத்தில் அந்நியர்கள் பலர் உரிய ஆவணங்களின்றி பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியிருந்து வருகின்றனர். அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் சொத்தும் வாங்கி பாரத குடிமக்கள் போல சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வேறெந்த நாட்டிலும் இது போன்ற நிலை இல்லை. இதற்கு முடிவு கட்ட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது” கூறுவது யார்? நீதியரசர் தண்டபாணி. குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழர் ஒருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவின் மீது இப்படி கருத்துச் சொன்னார் அவர். பாரத நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு ஆதரவாக வாடிக்கையாகக் குரல் கொடுக்கும் பலரை மிரளச் செய்யும் உத்தரவு இது. 2021 ஜூலை 3 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கேட்ட இந்த இடிமுழக்கம், அரசுக்கும் ஓர் எச்சரிக்கை.

திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களில் அதிக அளவில் இலங்கை, மியான்மர் நாட்டிலிருந்து வந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள், நைஜீரியா நாட்டினர் தங்கியுள்ளார்கள். இவ்வாறு தங்கியுள்ளவர்களில் பலர் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுகின்றன. பிடிபடுகிற அந்நிய நாட்டினர் போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல், திருட்டு, கொள்ளை போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது விசாரணையின் போது வெளிப்படுகிறது. பணம் வேண்டும் என்பதற்காக மாவோயிஸ்ட்களுக்கு உதவுபவர்களும் இவர்களில் அடக்கம்.
குறைந்த கூலி என்ற தூண்டில் கொரோனா தொற்று பரவியபோது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான வங்கதேச முஸ்லிம்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பெரும் பாலோர் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. திருப்பூர்,கோவை இங்கெல்லாம் அதிகஅளவில் நிட்டிங் தொழிற் கூடங்கள், தங்க நகை பட்டறைகள் உண்டு. குறைந்த கூலிக்கு சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேச, இலங்கைநாட்டவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நமதுநாட்டில் அரசாங்கத்தை ஏமாற்றும் விதமாக, தொழிலாளர் ஆவணங்கள் முறையாக பராமரிப்பு செய்யப் படாததால், பங்களா தேஷ், இலங்கை, நைஜீரியா போன்ற நாட்டினர் அதிகளவில் நுழைந்துவிடுகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமாக நுழைப வர்களுக்கு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு முதற் கொண்டு கிடைப்பதற்கு உள்ளுர் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள்.
‘திருப்பூர் நைஜீரியா சமூக நலன் மற்றும் ஆடை வர்த்தகர்கள் சங்கம்’ ஒன்று திருப்பூரில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொறுப்பாளர் பிலிப் நிக்கோலஸ் என்பவர்1.1.2018-ல் விடுத்த அறிக்கை, காதர்பேட்டை கார்மென்ட் மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ளது, அதில் “Any one who wishes to start a new business individually or in partnership with any Indian must submit copies of business documents to respective police authority and the Nigerian Association என குறிப்பிட்டுள்ளது, நைஜீரியர்களின் ஆதிக்கத்தையே காட்டுகிறது. சட்ட விரோதமாக உள்ளே நுழைந்த நைஜீரியர்கள் தொழில் செய்கிறார்கள் என்ற உண்மையை இந்த அறிவிப்புப் பலகை எடுத்துக் காட்டுகிறது.
மளிகைக் கடை நடத்தும் அந்நியர்
சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு திருப்பூர் சொர்க்கமேதான். காவல் துறையினரின் கணக்குப்படி 300க்கும் மேற்பட்ட வங்கதேச முஸ்லிம்கள் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். தமிழகத்தில் வங்கதேச முஸ்லிம்கள், மேற்கு வங்க மாநில ஆவணங்களை வைத்துக் கொண்டு தொழில் புரிகிறார்கள். வங்கதேச நாட்டின் குல்னா டிவிஷனை சேர்ந்த முகமது பாபுல் ஹுசேன் என்பவர் 13 ஆண்டுகளாக செவந்தம்பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான பங்களா தேஷ் நாட்டினர் உள்ளே வருவதற்கு இவர் துணை புரிந்துள்ளார். கடந்த ஆண்டு, பொலீவிய நாட்டிலிருந்து கோவை வந்த இரண்டு நைஜீரியப் பெண்கள் கோகைன் பொருட்களுடன் திருப்பூர் செல்லும்போது கைது செய்யப்பட்டார்கள். கொலம்பியா, பெரு, பொலீவியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கோகைன் இந்தியாவில் திருப்பூருக்கு வருவதாகவும், திருப்பூரிலிருந்து பெங்களுர், சென்னை, கொச்சி போன்ற பகுதிகளுக்கு அனுப்ப படுவதாகவும் ஒரு வரைபடத்தை 2018 ஜனவரியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருந்தது. போதை பொருள் திருப்பூரிலிருந்து பின்னர் மற்ற நகரங்களுக்கு அனுப்பப்டுகிறது.
இந்த கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நைஜீரிய நாட்டினர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிப்பாளையம் கோழிப்பண்ணை பகுதியில் 6 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த மொஷிருத்தீன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர். பிர்பும் மாவட்ட அடையாள அட்டை வைத்திருந்தாலும், பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவர் என்பது அம்பலமானது. இவருக்கு கேரளத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் தொடர்பு உண்டு.
பழனியில் ஹிந்துக்கள் பிழைப்பில் மண்
வங்கதேசத்தில் இருந்து பாரதத்தில் ஊடுருவிய முஸ்லிம்களும், மியான்மரில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, இந்தியாவினுள் அத்துமீறி ஊடுவிய ரோஹிங்கிய முஸ்லிம்களும் பழனிக்கு அருகே உள்ள சிவகிரிபட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ‘நாங்கள் வட இந்தியாவிலிருந்து பிழைப்பிற்காக வந்தவர்கள் என்று அப்பகுதி மக்களிடம் கூறி, நம்ப வைத்துள்ளனர்.
பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் நடைபாதைக் கடைகள், சாலையோர கடைகள் என்று தங்களின் வியாபாரத்தை தொடங்கி அதன் மூலம் ஏற்கனவே அங்கே கடை நடத்தி வருகின்ற உள்ளூர் ஹிந்துக்களின் வயிற்றிலும் அடிக்கிறார்கள். இந்தப் பேர்வழிகள் இந்திய அரசிற்கு எதிராக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு (சி.ஏ.ஏ) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் குதித்துள்ளது கவலை தரும் விஷயம். இவர்களுக்கு துணையாக இருப்பவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவை சேர்ந்தவர்கள். கடலூரை அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சிப் பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்து சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தியதில் வீட்டில் தங்கியிருந்தவர்கள் தங்களை மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வருவதாக கூறினார்கள். பல போலியான ஆவணங்களும், வெளி நாட்டினருடன் இவர்கள் கொண்ட தொடர்பும் கண்டு பிடிக்கப்பட்டது.
உண்மையில் இவர்கள் வங்கதேச முஸ்லிம்கள் என்பது பின்னர் தெரிய வந்தது. மத்திய அரசு ரோஹிங்கிய முஸ்லிம்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியதும், இதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிபடுத்திய பின்னரும் கூட, தமிழக அரசு தங்கியிருந்த ரோஹிங்கிய முஸ்லிம்களை அவர்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்பவில்லை. 2012லிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 19 குடும்பங்களை சேர்ந்த 92 ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்கியுள்ளார்கள். முந்தைய அரசு முஸ்லிம்களின் வாக்குக்காக அவர்களை திருப்பி அனுப்பவில்லை. தற்போது நடக்கும் தி.மு.க ஆட்சி திருப்பி அனுப்புவதும் சந்தேகம்தான்.
-ஈரோடு சரவணன்