ஹங்கேரி மக்கள் ஆர்பாட்டம்

ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட்டில், சீனாவின் ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்ட ஃபுடான் பல்கலைக் கழகம் அமைவதற்கு அந்த நாட்டு அரசும் அந்த பல்கலைக் கழகமும் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த கல்வி வளாகம் ஹங்கேரியின் கல்வித் தரத்தை பாதிக்கும். ஹங்கேரி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனர்கள் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்று ஹங்கேரி மக்கள் கூறுகின்றனர். ஆனால், ஹங்கேரியர்களுக்கு தரமான கல்வியை வழங்க இதும் உதவும் என்று ஹங்கேரி அரசு கூறி வருகிறது. மேலும், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், வரும் 2022ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை வேகமாக மேம்படுத்தி வருகிறார் என குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.