வீட்டு வசதி திட்டம்

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் 1.13 கோடிக்கும் அதிகமான வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 85 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் வீடுகளில் குடியேறியுள்ளனர். அவ்வகையில், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அசாம் மாநிலம் இதுவரை அனுமதிக்கப்பட்ட தனது பங்கில் 23 சதவீதத்தை நிறைவு செய்துள்ளது. திரிபுரா 50 சதவிகிதத்தை நிறைவு செய்து வடகிழக்குப் பகுதியில் முதலிடத்தில் உள்ளது. இது தவிர, டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனி பகுதிகளில் வசிக்கும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பிரதம மந்திரி டெல்லி ஆவாஸ் அதிகாரர் யோஜனா (PM-UDAY)  திட்டத்தின் கீழ் காலனி பகுதிகளில் வீடு கட்ட நில உரிமைகளைப் பெறுவதற்காக டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.