உள்துறை அமைச்சகக்குழு விரைவு

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் குறித்து விசாரிக்க, கூடுதல் செயலாளர் தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழு, மேற்கு வங்க மாநிலத்தின் வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறை குறித்த கள நிலவரத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கையை, அடுத்த 48  முதல் 72 மணி நேரத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். முன்னதாக, மேற்கு வங்க ஆளுநரும் காவல்துறைத் தலைவர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளை வரவழைத்து, இது குறித்து அவசர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். மத்திய அரசும், இந்த வன்முறை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மமதா பானர்ஜி அரசிடம் கோரியிருந்தது. பலமுறை நினைவூட்டல்கள் கொடுத்தபோதும், மம்தா பானர்ஜி, மே 5 வரை பதிலளிக்கவில்லை. இதனால், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளது.