கோயிலை காத்த ஹிந்துக்கள்

பெங்களூருவில் உள்ள ரயில்வே கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சட்டபூர்வமாக செயல்பட்டு வருகிறது.  இக்கோயிலை, திடீரென இடிக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை எதிர்த்து அப்பகுதி ஹிந்துக்கள், ஹிந்து ஜனஜக்ருதி சமிதியுடன் இணைந்து போராடி தடுத்து நிறுத்தினர். இக்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வசந்த நகரில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கேளடி அரசர்களால் நீலகண்ட தேசி கேந்திர மடத்திற்கு வழங்கப்பட்ட நிலப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. சில ரயில்வே அதிகாரிகள் இக்கோயில் வாரியத்தின் அறங்காவலர்களாகவும் உள்ளனர். ரயில் பாதைகள், சாலைகள் அல்லது கட்டிடங்களுக்கு எந்த வகையிலும் கோயில் தடையாக இல்லை என்றபோதிலும், சில அதிகாரிகள் திட்டமிட்டே கோயிலை இடிக்க முற்பட்டனர் என ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறினார். இக்கோயிலை இடிக்க முற்படும் அதிகாரிகள், அதே சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளான்களாக வளர்ந்து வரும் சட்டவிரோத சர்ச், மசூதிகளைத் தொடுவதற்கு அஞ்சுகின்றனர் என மைசூரு பா.ஜ.க எம்பி பிரதாப் சிம்ஹா குற்றஞ்சாட்டினார். இதுகுறித்த விவரங்கள் மாநில முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.