வி.ஹெச்.பி பயிற்சி முகாம்

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக அமைப்பின் சார்பில், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான இரண்டு நாட்கள் பண்பு பயிற்சி முகாம் காஞ்சிபுரம் சக்திவேல் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ள இந்த முகாமில் தேச பக்தி, தெய்வ பக்தி, பெண்களின் கௌரவம், ஹிந்து தர்மம், தன்னம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். நிகழ்ச்சியில் ஸ்ரீல ஸ்ரீ தொண்டை மண்டல ஆதீனம், ஸ்ரீல ஸ்ரீ ஹனுமன் மாதாஜி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைக்கின்றனர். மேலும் விவரங்களுக்கு 79041 79287 அல்லது 99413 55345 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.