அபுதாபியில் ஹிந்து கோயில்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோயிலின் பணிகளைப் பார்வையிட்டார். இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பாரத தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்டியில், “வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் ஐக்கிய அரபு அமீரக சுற்றுப் பயணத்துக்கு மங்கலகரமான தொடக்கம் அமைந்துள்ளது. அபுதாபியில் சுவாமி நாராயணன் கோயில் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். கோயில் கட்டுவதற்காக பாரத தேசத்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய அவர், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இக்கோயில் திகழும் என குறிப்பிட்டார்” என தெரிவித்துள்ளது. சுமார் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் ஹிந்து கோயிலில், பாரத சிற்பக் கலைஞர்கள் மூலம் கல் வேலைப்பாடுகள் நடைபெறுகின்றன. தனது இந்தப் பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையதுடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.