இதுக்கு பேசாம ஹிந்துவாகவே இருந்திருக்கலாம்

ஹிந்து மதத்தில் சாதிப் பாகுபாடு உள்ளதாகக்கூறி, பட்டியலினத்தவர்களை கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றுகின்றனர். ஆனால் கிறிஸ்தவ மதத்தில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய பட்டியலின கிறிஸ்தவர்கள் பிஷப் ஆக முடியாது. அவர்களுக்கென தனிப் பாதை, தனி கல்லறை, தனி சர்ச், தனி சவ ஊர்திகள் உள்ளன. இது குறித்த விவரங்கள் போப் வரை தெரியும். அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இங்குள்ள ஆயர்கள் மாறுவதாக இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் 18 பிஷப்களில் பட்டியலினத்தவர் ஒருவர் மட்டுமே. பட்டியலின கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் உட்கார வேண்டும், வழிபாட்டின்போது புது நன்மை கொடுப்பதைக் கூட அவர்கள் பக்கத்தில் போய் வாங்க முடியாது. கடந்த சில நாட்களாக இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று ‘இந்திய தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் மேத்யூஸ் ஒரு யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.