ஹிந்து இனப்படுகொலை கண்காட்சி

இந்த ஆண்டு துர்கா பூஜையின் போது வங்கதேசத்தில் அமைதியை விரும்பும் சிறுபான்மையினத்தவரான ஹிந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான அட்டூழியங்களால் பலர் உயிரிழந்தனர், கோயில்கள், வீடுகள், சொத்துகள் கொள்ளையிடப்பட்டு எரிக்கப்பட்டன, பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அங்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது இந்த கொடூரங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. 1946ல் நோகாலியில் 5,000 வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர், லட்சக்கணக்கானோர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். வங்கதேச விடுதலைப் போரின் பின்னணியில், 2.4 மில்லியன் வங்கதேச ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், பெங்காலி ஹிந்து இனப்படுகொலை குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2021 டிசம்பர் 11, 12 தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் மையத்தில் உள்ள பெங்கால் ஆர்ட் கேலரியில் நடத்தப்படுகிறது. , 1946 முதல் இன்றுவரை நடந்த சம்பவங்களின் தொகுப்பு இதில் இடம்பெறும். கொல்கத்தாவை சேர்ந்த சிந்தனையாளர் குழு அமைப்பான ‘பச்சிம்பாங்கர் ஜன்யா’ இந்நிகழ்ச்சியை  நடத்துகிறது.