இந்து முன்னணி புகார் மனு

திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் குடிலில் கோயில் கண்காணிப்பாளர்கள் கலைவாணன், வித்தியாசாகர் இருவருக்கும் ஊழியர்கள் கறி விருந்து பரிமாறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் குடில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக கோயில் கண்காணிப்பாளர்கள் கறி, மீன், முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட்டுள்ளனர். கோயில் நிர்வாகத்தின் மூலம் சைவ உணவுகளை தவிர வேறு உணவுகளை சாப்பிட கூடாது என சுற்றறிக்கை உள்ளது. கோயில் துணை ஆணையர் விஜயா தவறு செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியுள்ளனர்.