ஹனுமன் ரத யாத்திரை

கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமி தலைமையிலான ‘ஸ்ரீ ஹனுமத் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை’, அடுத்த 12 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சென்றுவரும் வகையில் லட்சிய ‘ரத யாத்திரை’ ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் இருந்து மூன்று ஜோடி ராமப் பாதுகைகள் கொண்டுவரப்படும். இதில் ஒரு ஜோடி ஹனுமான் கோயிலில் வைக்கப்படும், இரண்டாவது ஜோடி கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கிஷ்கிந்தா, அஞ்சனை பர்வதத்தில் வைக்கப்படும் மூன்றாவது ஜோடி, ஹனுமத் சரித்ரா ரத்தில் வைக்கப்படும். மேலும், ஹனுமனின் பிறப்பிடமான கிஷ்கிந்தாவில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் 215 மீட்டர் உயரமுள்ள ஸ்ரீ ஹனுமான் சிலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தவிர, கிஷ்கிந்தாவில் 10 ஏக்கர் பரப்பளவில் ஹனுமன் கோயில், பக்தர்களுக்கு உணவு பரிமாறும் ‘பகவத் பிரசாத்’ பவன்,  பக்தர்களுக்காக 108 அறைகளைக்கொண்ட ‘பக்தி நிவாஸ்’, ‘பகவத் பக்தி வைபவ’ என்ற பெரிய ஆடிட்டோரியம் போன்றவை கட்டப்படும் என்று சுவாமி கோவிந்தானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.