ஜெகனின் பொய் வேடம்

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், கிறிஸ்துவ மதமாற்றங்கள் அதிகரித்துள்ளன. ஹிந்துக் கோயில்கள்மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டின. இதனால் தன் ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னை ஒரு ஹிந்து ஆதரவாளராகக் காட்டிக்கொள்ள, ஜெகன்மோகன் முயன்று வருகிறார். இதற்காக, 2007ல், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் துவக்கப்பட்ட ‘கல்யாணமஸ்து’ திட்டத்தில், ஏழைப் பெண்களுக்கு 1 கிராம் தங்கத்தில் தாலி வழங்கித் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 2012ல் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் துவக்கி, 2 கிராம் தங்கத்தில் தாலியும் 2 கிராம் வெள்ளியில் இரண்டு மெட்டிகளும் வழங்க முடிவுசெய்துள்ளனர். ஆனால், ‘இது திருப்பதி தேவஸ்தானத்தின் செலவிலேயே வழங்கப்படுகிறது, ஜெருசலேம் செல்ல ஆந்திர அரசு வழங்கும் பணம் சர்ச்சுகளின் வருமானத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை. அது அரசின் வரிப்பணத்தில் இருந்துதான் வழங்கப்படுகிறது. இதை ஜெகன் மூடி மறைக்கிறார், அவர் என்றும் தீவிரக் கிறிஸ்தவ ஆதரவாளர்தான். தற்போது நடிக்கிறார்’ என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.