ஹபீஸ் சயீத்தின் மகனும் பயங்கரவாதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உத்-தவா (JuD) தலைவரான பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதே சமயம், இந்நிலையில், ஹபீஸ் முகமது சயீத்தின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் விதிகளின் கீழ், பாரத உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 8ல் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், ஹபீஸ் தல்ஹா சயீத், லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தலைவர் மற்றும் அதன் மதகுரு தலைவராக உள்ளார். இவர், பாரதத்தில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்காக ஆட்சேர்ப்பு, நிதி சேகரிப்பு, திட்டமிடல் மற்றும் தாக்குதல்களை செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பாரதம், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் பாரத்த்திற்கெதிராக ஜிஹாத் பிரச்சாரம் செய்துள்ளார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.