காவலர் பணி நீக்கம்

கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ தரவு தளத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குறித்த ரகசிய விவரங்களை எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு கசியவிட்ட முஸ்லிம் காவலர் பி.கே அனஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, 135க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்கள் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்துள்ளதும் ‘பச்சை விளக்கு’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு இதற்காக உருவாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இது குறித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த நோட்டீசுக்கு அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  மேலும், இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு விஸ்வாசமாக இருந்த சுமார் 15 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரள காவல்துறையில் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ போன்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பினரின் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை கேரள அரசு முதலில் புறக்கணித்தது என்பது நினைவு கூரத்தக்கது.