வெண்டிலேட்டர்களை குற்றம் சொல்லும் அரசுகள்

கடந்த ஆண்டு முதல் சுமார் 30,000 வென்டிலேட்டர் இயந்திரங்களை தயாரித்து பாரதத்தின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது இந்திய அரசின் ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம். ஆனால், பஞ்சாப் போன்ற சில மாநில அரசுகள் சில வென்டிலேட்டர்கள் சரிவர வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டின. ஆனால், டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் அரசு மருத்துவமனைகள் வெண்டிலேட்டர்களை முறையாக பராமரிக்கவில்லை. பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்யத் தவறிவிட்டன, இதன் காரணமாகவே வென்டிலேட்டர்கள் பழுதாகியுள்ளன என தெரிவித்துள்ளது.

முன்னதாக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாகியான எம்.வி கௌதம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘எங்கள் குழு இது குறித்து ஆராய்ந்தபோது, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நோயாளி ஐ.சி.யுவிற்கு வரும்போது புளோ சென்சாரை மாற்றுவது கட்டாயம். வென்டிலேட்டர்களை நிறுவும்போது, அந்த இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையோடு அவை சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒரு வென்டிலேட்டர் இருப்பிடத்தை மாற்றும்போதெல்லாம், அந்த இடத்திற்கு ஏற்ப ஆக்ஸிஜன் அழுத்தத்தை மாற்ற வேண்டும். 12 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சென்சார்களைப் பயன்படுத்திய பிறகு அவை மாற்றப்பட வேண்டும். இது போன்ற முறையான பராமரிப்புகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதனல்தான் அவை பழுதாகியுள்ளன’ என தெரிவித்தார்.

முன்னதாக ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் மத்திய அரசு அனுப்பிய 1,500 வெண்டிலேட்டர்களை பயன்படுத்தாமல் அப்படியே வைத்துள்ளதுடன் வெண்டிலேட்டர்கள் பற்றாகுறை என மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.