லிங்க முத்திரை ஐ.ஐ.டி அங்கீகாரம்

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, மதுரை சித்த மருத்துவர் ஜெய கல்பனாவின் ஆராய்ச்சி கட்டுரையின் அடிப்படையில், ‘லிங்க முத்திரை’யை சென்னை ஐ.ஐ.டி., அங்கீகரித்துள்ளது. சர்வதேச இதழ் ஒன்றிலும் இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஐ.ஐ.டி வெளியிட்டது. இந்த முத்திரை செய்வதால் உடல் வெப்பம் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி துாண்டப்பெறும். கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆக்சிஜன் அளவு கணிசமாக உயரும். கர்ப்பிணி பெண்கள் தவிர சிறுவர்கள், முதியோர், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், கொரோனா சிகிச்சை பெறுவோர், செயற்கை ஆக்சிஜனில் இருப்பவர்களும் இந்த முத்திரையை செய்யலாம். இதை செய்ய துவங்கி, 5 முதல் 40 நிமிடங்களில் உடலில் வெப்பம் அதிகரித்து வியர்க்கும் போது நிறுத்திவிட வேண்டும். இந்த முத்திரை செய்வது குறித்து சரியான முறையை அறிந்து, எந்த நாசி துவாரத்தில் குறைந்த மூச்சு வருகிறது அல்லது அடைத்துள்ளதோ அந்தப் பக்கம் உள்ள கை கட்டை விரலை செங்குத்தாக உயர்தி இந்த முத்திரையை செய்யலாம்.