ஸ்வயம்சேவகர்கள் நடத்தும் கோவிட் பராமரிப்பு மையம்

ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் வித்யா பாரதி நடத்தும் விஞ்ஞான் விஹார் பள்ளியை 100 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றி இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஸ்வயம் சேவகர்கள். இங்கு வரும் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பராமரிப்பு, இலவச படுக்கை, இலவச மருந்து, ஆரோக்கியமான சத்தான உணவு, அத்துடன் தினசரி யோகாசனம், பிராணயாமா மற்றும் சிறப்பு மருத்துவர்களுடன் ஆலோசனை உள்ளிட்ட பெருநிறுவன மருத்துவமனைகளில் கூட பொதுவாகக் காணப்படாத பிற சேவைகளையும் வழங்கி வருகின்றனர். இங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.