பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் கண்டனம்

பிரான்ஸில் வளர்ந்துவரும் முஸ்லிம் பயங்கரவாதத்தை தடுக்க அந்நாட்டு அரசு புதிய சட்டம் கொண்டுவரவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதனையடுத்து தற்போது ‘புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்’ பிரான்ஸில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில், மதம் குறித்த ஒரு மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, பிரான்ஸின் புதிய சட்டம், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை களங்கப்படுத்துவதாகக் கூறியுள்ளார். தங்கள் உள்நாட்டு பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டத்தை விமர்சிக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதியின் கருத்திற்கு, பிரான்ஸ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானின் தூதரை வரவழைத்து தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.