பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், பாகிஸ்தானின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 2 சதவிகிதம் உள்ளனர். பெரும்பாலான ஹிந்துக்கள் சிந்து மாகானத்தில் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர் என்ற அனைத்து சிறுபான்மையினரும் பல்வேறு வழிகளில் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். அவ்வகையில், அப்பகுதி நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமணி, அங்கு மற்றொரு வெகுஜன மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது முகநூல் பதிவில், ‘இன்று, 60 பேர் இஸ்லாத்தை எனது கண்காணிப்பில் ஏற்றுக்கொண்டனர், அவர்களுக்காக ஜெபிக்கவும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.