ஹிந்து குடும்ப சங்கமம் – 2021

விவேக பாரதி, ராஷ்ட்ர சேவிகா சமிதி இணைந்து நடத்திய, ‘ஹிந்து குடும்ப சங்கமம் – 2021’ என்ற நிகழ்ச்சி, சென்னை, தி.நகர் சுந்தரம் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், குடும்ப உறவுகளின் மேன்மை, தம்பதியர் இடையே புரிதல், சமுதாயத்தை உயர்த்த குடும்பத்தின் பங்களிப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன், கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டுகள், இசை, உரை, நடனம், விடுகதை, அந்தாதி, பாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. ஆர்.பி.வி.எஸ்.மணியன் தொகுத்த, ‘இனியதொரு ஹிந்துக் குடும்பம், சில உரத்த சிந்தனைகள்’ என்ற, புத்தக வெளியீடு, ‘நம் பண்பாட்டை காப்பாற்றப்போவது நம் குடும்பங்களே’ என்ற தலைப்பில், ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொற்பொழிவும் நடைபெற்றது.