தாய்மதம் திரும்பிய குடும்பம்

கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் கனிகல் கிராமத்தில் வசிக்கும் 55 வயதான திமோதி ஹோஸ்மானி என்ற கூலித் தொழிலாளி தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் இணைந்து 50 வருடங்களுக்குப் பிறகு தனது தாய் மதம் திரும்பியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், எனது குடும்பம் பட்டியலின குடும்பம், ஹிந்து மதத்தை விட்டு வெளியேறி கிறிஸ்தவத்தை எனது பெற்றோர் தழுவிய காரணம், குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தாய்மதம் திரும்புவதற்கு முன்பாகவே பல ஆண்டுகளாக நாங்கள் ஹிந்து சடங்குகள், பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து வருகிறோம் என தெரிவித்தார். இந்த குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வேர்களுக்குத் திரும்புவதை ஒரு எளிய விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளனர். கர்நாடகாவில் சமீப காலமாக பலரும் தாய்மதம் திரும்பி வரும் நிலையில், யாத்கிரி மாவட்டத்தில் இதுவே முதல் நிகழ்வாகும்.