போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் என்ற இந்து முன்னணியின் புத்தகத்தில் இருந்து

  1. இஸ்லாமிய மதக் கோட்பாடான ஷரியத்தில் ஒரு வார்த்தையைத் தொட்டாலும் அவர் கைகள் அப்பொழுதே வெட்டப்படும்’ என்றார் கேரள சட்டமன்ற உறுப்பினர் சி.பி.ஷாஜி. (ஆதாரம்: மாத்ரு பூமி (3-7-1985). இதை ஒப்புக்கொள்வீர்களா?
  2. அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கையும், நமது நாட்டின் பல்வேறு வகுப்பினரையும் ஒரு சிந்தனையின் கீழ் ஒன்றிணைக்கும் லட்சியத்திற்கு எதிராக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
  3. அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லிம்கள் இன்று 25 பாராளுமன்றத் தொகுதிகளிலும், 120 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் எந்தக் கட்சி ஆட்சி அமைக்குமோ அதற்கு, அதாவது காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக வாக்களிக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  4. ‘ஒரு சில அரசு சாரா நிறுவனங்களும், பத்திரிகைகளும் கூட உண்மையில் சில தீவிரவாத குழுக்களின் அலுவலகங்கள் தான்’ என்று முன்னாள் பஞ்சாப் காவல்துறை தலைவர் கே.பி.எஸ்.கில் கூறியது உங்களுக்குத் தெரியுமா? ‘அரசு சாரா நிறுவனங்களுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது’ என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்!
  5. மதச்சார்பற்றவராகக் கருதப்படும் மௌலானா வாஹிதுனிடம் கார்கிலில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்ட போது, முஸ்லிம்களை எதிர்த்துப் போரிடுபவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்ய முடியாது” என்று கூறினார். இதை நீங்கள் அறிவீர்களா? (சோனியாவும், பிரியங்காவும் பிறகு அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் என்பது தனிச் செய்தி)
  6. அயோத்தியா வழக்கில், விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு என்ன சம்பந்தம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. ஆனால் பாபர் மசூதி செயற்குழுவிடமோ, அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்டவாரியத் திடமோ, அவர்களுக்கு என்ன சம்பந்தம் என்று அதே உச்ச நீதிமன்றம் கேட்கவில்லையே? இது நீதிமன்றத்தின் இரட்டை வேடமில்லையா?
  7. அயோத்தியா பிரச்சனையில், இந்துக்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எத்தனை முறை நமது அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? வயதான முஸ்லீம் பெண் ஷாபானு ஜீவனாம்சம் கேட்ட வழக்கிலும், இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அளித்த தீர்ப்பிலும் எனப் பல உதாரணங்கள் உள்ளனவே!
  8. நரேந்திர மோடி, உமாபாரதி போன்ற முதல்வர்களைச் சின்னச் சின்ன காரணங்களுக்காகப் பதவி விலகச் சொன்னார்களே, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படைவீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகின்ற ஜம்மு-காஷ்மிர் மாநில முதல்வரை மட்டும் பதவி விலகச் சொல்வதில்லையே, அது ஏன்?
  9. சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையிலான காசி மயானச் சண்டையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட முடியாது என்று உத்தரப்பிரதேச அரசு 1986இல் கைவிரித்தது. காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆணைக்கு அடிபணிய கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதுதான் நீதிமன்ற உத்தரவை மதிப்பதற்கு அடையாளமா?