மூகநூல் அராஜகம்

‘தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளியிட பணம் செலுத்த வேண்டும்’ என்ற சட்டத்தை ஆஸ்திரேலியா முன்மொழிந்தது. இதையடுத்து, அந்நாட்டு பயனர்கள் செய்திகளைப் பகிர பேஸ்புக் தடை விதித்திருக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர், ‘பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகை மாற்றி அமைக்கக்கூடும். ஆனால் அதற்கு அர்த்தம், அவர்கள் உலகை இயக்க வேண்டும் என்பது அல்ல. சுகாதார, அவசர செய்திகளை கூட முகநூல் இருட்டடிப்பு செய்திருப்பது அராஜகம். நான் இப்பிரச்சினை தொடர்பாக  உலக தலைவர்களை தொடர்பு கொண்டுள்ளேன். எங்களை இதன்மூலம் மிரட்ட முடியாது. கூகுள் போல இந்த விஷயத்தில் முகநூலும் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.