விவசாய போராட்டம் சில சதிகள்

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை கலவரங்களை பெரிதுபடுத்தி வெளியிட்டு, வன்முறையை ஊக்குவிப்பது, வேகம் குறையாமல் பார்த்துக் கொள்வது, பொய் செய்திகளை பரப்புவது போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் இணைந்து செயல்பட்டன. சமூக ஊடகங்கள் இதற்கு பெருமளவு பயன்                 படுத்தப்பட்டன. சில சார்பு ஊடகங்களின் பங்கும் இதில் அளப்பறியது. இந்நிலையில் வன்முறைக்கு சதி செய்ததாக மனோரமா நியூஸ், மீடியா ஒன், ரிப்போர்ட்டர் டி.விக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கிரெட்டா துன்பெர்க் மறதியாக ட்வீட் செய்த  கருவித்தொகுப்பு (டூல்கிட்) பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. அந்த டூல்கிட், விவசாய ஆர்ப்பாட்டங்களை அதிகரிப்பதற்கான விரிவான செயல் திட்டங்களை கொண்டிருந்தது. அதில் விவசாய போராட்ட த்தை வழி நடத்துபவர்களின் சில பெயர்களும் இடம் பெற்றிருந்தன. திஷா ரவி, நிகிதா ஜேக்கப், சாந்தனு போன்றோர். அதில் சிலர். அதில் ஒரு முக்கிய புள்ளி ‘பீட்டர் பிரெட்ரிக் ‘.  இவர் ஒரு தீவிர காலிஸ்தான் ஆதரவாளர், பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ.யின், கே 2 (காஷ்மீர்-காலிஸ்தான்) அமைப்புடன் தொடர்பில் உள்ளார். அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புத்துறையும் இவரை கண்காணித்து வருகிறது என டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

 விவசாய  போராட்டத்தை வைத்து டெல்லியில் அமைதியின்மை, கொந்தளிப்பை உருவாக்க, சமூக வலைத்தளங்களில் தேசவிரோத சக்திகள் இரண்டாவது டூல்கிட் ஒன்றையும் தயாரித்திருந்தனர், ஆனால் காவல்துறையின் நடவடிக்கையால் அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு டூல்கிட்களின் தகவல்களை கேட்டு, டெல்லி காவல்துறை கூகுளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர்களின் ஜூம் செயலி சந்திப்பு குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.