தேர்வுத் திருவிழா 4.0

பிரதமர் நரேந்திர மோடியின் “தேர்வுக்கு தயாராவோம்” கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தற்போது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) ஏப்ரல் 11, 2022 முதல் 31 மே, 2022 வரை தேர்வுத் திருவிழா 4.0 நிகழ்ச்சியை கொண்டாடுகிறது. இது தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய குழந்தைகளின் பார்வையை மாற்றவும், தேர்வு முடிவுகளுக்கு முன் அவர்களின் கவலைகளை களையும் வகையிலும் திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டு இத்திருவிழாவில் குழந்தைகளைத் தவிர, ஆசிரியர்களும் பெற்றோர்களையும் சென்றடையும் நோக்கில் பல்முனை அணுகுமுறை பின்பற்றப்படும். முகநூல், டுவிட்டர், என்.சி.பி.சி.ஆரின் யூடியூப், தூர்தர்ஷன் நேஷனல் போன்றவற்றில் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு முன் தங்கள் மன அழுத்தத்தையும் கவலைகளையும் குறைக்க நேரடி ஒளிபரப்பு அமர்வுகள் மூலம் வல்லுனர்களுடன் தொடர்பு கொள்ள இது உதவும். சம்வேதனா – (1800-121-2830) என்பது கோவிட் தொடர்பான மன அழுத்தம் போக்குவதற்கான ஆலோசனை வழங்கும் கட்டணமில்லா தொலைத்தொடர்பு சேவையாகும். மாணவர்கள் தேர்வு மற்றும் முடிவுகள் தொடர்பான கேள்விகள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் இந்த சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.