தப்பித்த கோவேக்ஸின்

மத்திய பிரதேசத்தின் நர்சிங்கபூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மர்மமான சூழ்நிலையில் பயோடெக் தயாரித்த ரூ. 8 கோடி மதிப்புள்ள கோவாக்சின் 2.40 லட்சம் டோஸ் கொண்ட ஒரு டிரக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட அந்த டிரக்கின் டிரைவர் காணாமல் போயுள்ளார். விகாஸ் மிஸ்ரா என்ற அந்த ஓட்டுனர் உ.பி, அமேதி பகுதியை சேர்ந்தவர். அவர் எதனால் வண்டியை விட்டு சென்றார், எங்கு சென்றார், என்ன ஆனார் என்ற விவரம் தெரியவில்லை. அந்த டிரக்கின் என்ஜின் இயக்க நிலையிலேயே விடப்பட்டிருந்தது. இதனால் அதன் குளிர்சாதன வசதி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்ததால் அதில் கொண்டு செல்லப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஓட்டுனரை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.