பொருளாதார வளர்ச்சி 10.5%

 நேற்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும்  நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.