சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்வழிப்பாதைகள்

பாரதத்தின் கடல்சார் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘பாரதத்தில் முக்கிய துறைமுகங்களின் திறன், கடந்த 2014ல் 870 மில்லியன் டன்கள். ஆனால், இது தற்போது 1,550 மில்லியன் டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல்களின் காத்திருப்பு நேரம் குறைத்துள்ளது. துறைமுகங்களில் உலகத் தர கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாரதத்தின் நீண்ட கடற்கரைகள் உலகின் முதலீடுகளை ஈர்க்க தயாராக உள்ளன. நீர்வழிப் போக்குவரத்துக்கு நமது அரசு இதுவரை இல்லாத அளவில் முதலீடு செய்து வருகிறது. உள்நாட்டு நீர்வழி சரக்குப் போக்குவரத்து செலவு குறைந்தது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. எனவே, வரும் 2030-க்குள் 23 நீர்வழிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார்.