தொழில்துறை ஊக்குவிப்பு திட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் உள்ள சிக்கல்கள் காரணமாக, மும்பையின் நவீன மெட்ரோ ரயில் திட்டம், 17 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான புல்லட் ரயில், 12 பில்லியன் டாலர் எஃகு திட்டம், 700க்கும் மேற்பட்ட சாலை திட்டங்கள் போன்றவை சில சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனால் பொருளாதார இழப்பு, தேச முன்னேற்றத்தில் தடை, திட்ட மதிப்பீடு உயர்வு போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. தற்போது வேகமெடுத்து வரும் பாரத பொருளாதாரம், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் பாரதத்திற்கு வருவது போன்றவற்றால் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவது அவசியமாகிறது. இதற்காக ‘நிதி ஆயோக்’ அமைப்பு ஒரு புதிய மாதிரி மசோதாவை உருவாக்கியுள்ளது. இதில் ‘நிலத்தின் உரிமையாளரை துல்லியமாக அடையாளம் காண்பது, உத்தரவாதம் அளித்தல், சர்ச்சைகளுக்கு இழப்பீடு, வேகமான தீர்வு, தேவையற்ற ஆங்கிலேயர் கால சட்டங்களை மாற்றியமைத்தல், கணினி மயமாக்கல்’ போன்றவை சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.