மருந்து வினியோகிக்க டிரோன்

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 300 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருந்துகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் கிருமிநாசினி தெளிக்கவும் ஆளில்லா விமானங்களான டிரோன்களை பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த, ‘கருடா ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனத்தின் டிரோன்கள், இதற்குப் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.