புதிய முதல்வரை வரவேற்கிறோம்

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசினை வாழ்த்தி வரவேற்போம். இந்த புதிய அரசு அனைத்து மக்களுக்குமான அரசாகவும், மக்களின் துயர் துடைக்கும் அரசாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். கொடிய கொரோனா தொற்றினால் தமிழகம் சந்திக்கும் சவால்களை சரி செய்து சாமானிய மக்களின் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக இருக்க விஜயபாரதத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.