தேச விரோத நடவடிக்கைகளுக்கு நன்கொடை

பந்தன் கொன்னகர் என்ற ஏழைகளுக்கு உதவும் அமைப்பு என சொல்லிக்கொள்ளும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், ‘போர்ட் பவுண்டேஷன்’ என்ற அமைப்பிடமிருந்து தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் ரூ. 31. 22 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாக எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள், வெளிநாட்டு நிதி சட்டவிரோதப் பயன்பாடுகளைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ‘போர்ட் பௌண்ட்டேஷன் இயக்குனர் சந்திரசேகர் கோஷ், என்பவர்தான் பந்தன் வங்கி லிமிடெட்டின் தலைமை செயல் அதிகாரி. இந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பந்தன் கொன்னகர் என்ற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆராய்ச்சி ஆய்வகங்களை நடத்துகிறது. இந்த ஆய்வகம் ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் போன்றோர்களோடு கூட்டு வைத்துள்ளது. இந்த சுரஞ்சன் தாஸ், தேசவிரோத, நக்ஸலைட் ஆதரவு மாணவர்களை கலவரம் செய்ய தூண்டியதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன’, எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகளின் மீது முழுமையான விசாரணை நடத்தி, இந்த அமைப்பின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என எல்.ஆர்.ஓ கோரிக்கை விடுத்துள்ளது.