கொரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்

மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுநீர், வியர்வையில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் முயற்சி துவக்கியது ராணுவம். இதற்காக சண்டிகரில் உள்ள, ராணுவ மையத்தில், ‘காஸ்பர், ஜெயா’ என்ற இரு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மணி என்ற மூன்றாவது நாய்க்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் இதற்காக 10 நாய்கள் பயிற்சியளித்து களமிறக்கப்பட உள்ளன. இவை 16 வார பயிற்சியில் கொரோனா பாதிப்பை உணர்ந்து விடுகின்றன. ஏற்கனவே பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில், பஸ், ரயில், விமான நிலையங்களில் கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.