நுாறு ரூபாய் கூட வைக்கலேன்னா

படிக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு, எம்.ஜி.ஆர் தயவில் படித்த தி.மு.க பொதுச்செயலர் துரைமுருகனுக்கு அரசியலுக்கு வந்ததும் சேர்ந்த ஏராளமான சொத்துகளில், திருப்பத்துார் ஏலகிரி மலை மஞ்சகொல்லையில் உள்ள 25 ஏக்கர் சொகுசு பங்களாவும் ஒன்று. சில நாட்களுக்கு முன், அங்கு திருட வந்த மர்ம நபர்கள் எதுவும் சிக்காததால், சி.சி.டி.வி, ஹார்டு டிஸ்க்கை எடுத்துச் சென்றதுடன் அந்தசொகுசு பங்களா சுவற்றில், ‘ஒரு, 100 ரூபாய்கூட வைக்க மாட்டாயா’ என கடுப்பில் எழுதியும் வைத்துள்ளனர்.