பாரதம் நெருக்கடிக்கும் பணியாது

பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில், பிரான்ஸ் துாதர், ழான் ஒய்வஸ் லீ டிரைவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி, காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் ஒரே நாடு பாரதம்தான். அதேசமயம், பருவ நிலை மாற்ற இலக்கை எட்டுவது தொடர்பான நடவடிக்கைகளில் பாரதம் எந்தவித நெருக்கடிக்கும் அடிபணியாது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய செயல்பாடுகளால், இன்று நாம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம். அதிலும், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட மாசுகள் காரணமாக, தற்போது உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இந்த பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால், இதுவரை இவர்கள் இதற்காக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை’ என்று கூறினார்.