சித்த மருத்துவத்திற்கு எதிராக பேசும் தி.மு.க எம்.பி

கொரோனோ இரண்டாம் அலை பல உயிர்களை பறித்து வரும் நிலையில், கொரோனோ பாதிப்பு சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்குகிறது. இதனால், ‘நீராவி’ பிடிப்பதால் கொரோனோ வீரியம் குறைய வாய்ப்பிருக்கிறது என்ற மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசு தமிழகத்தின் சில இடங்களில் “நீராவி” பிடிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைப்படி ‘நீராவி’ பிடிப்பதால் மனிதரின் சுவாசப் பாதை சீராகி, சளி, சுவாச கோளாறுகள், நுரையீரலுக்கு செல்லும் பாதை போன்றவை சீராகி நலம் பெறுவர் என்பது மரபு.

ஆனால், ‘திமுக ஒரு முற்போக்கான பகுத்தறிவு கட்சி, கோவிட் சிகிச்சைக்காக சித்த மருந்து போன்ற விஞ்ஞானமற்ற, நிரூபிக்கப்படாத மருத்துவப் பரிசோதனைகளில் அரசு ஈடுபடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த முறைக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என இதனை கேலி செய்துள்ளார் தி.மு.கவின் தர்மபுரி எம்.பி செந்தில்குமார். இவர் ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல். ‘நீராவி’ பிடிப்பதால் கொரோனோ வராது என யாரும் கூறவில்லை, மாறாக சுவாசப் பாதையை ‘நீராவி’ பிடிப்பதன் மூலம் சரி செய்வதால் கொரோனோ வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே இது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசையும் அதனை நடத்தும் தி.மு.கவையும் ஒன்றாக கேலி செய்யும் செந்தில் குமார் மீது தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?