மதமாற்ற தடை சட்டத்திற்கு தி.மு.க அரசு எதிர்ப்பு

பா.ஜ.கவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் மனுவில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது லாவண்யாவின் தற்கொலைக்கான அடிப்படை காரணத்தை சி.பி.ஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் எனவும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்தும், ஏமாற்றியும் அச்சுறுத்தியும் நடைபெறும் கட்டாய மதமாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் எனவும் மதமாற்ற தடை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் லாவண்யாவின் தற்கொலையை தமக்கு சாதகமாக திசை திருப்ப மனுதாரர் முயல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும். என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும் தமிழக மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். தமிழகத்தில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல். எனவே, மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனிடையே, பெரும்பான்மை மக்களை புறக்கணித்து சிறுபான்மையினருக்கு மட்டுமே எப்போதும் ஆதரவாக செயல்படும் தி.மு.க அரசு, ஹிந்துக்களின் உரிமைகளை நசுக்கும் அரசு, கன்னியாகுமரியில் பேசிய பாதிரி ஜார்ஜ் பொன்னையா, தி.மு.கவை, “உங்கள் திறமையால் நீங்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து போட்ட பிச்சையால்தான் வெற்றி பெற்றீர்கள்” என்று தோலுரித்தது நினைவில்லையா? லாவண்யா, தற்கொலைக்கு காரணமானவர்களில் ஒருவரான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி, ஜாமீன் பெற்று வெளியே வந்தபோது, அவரை சிறை வாசலுக்கே சென்று சால்வை அணிவித்து வரவேற்றுப் பாராட்டியவர் உங்கள் தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் என்பதை மறந்து விட்டீர்களா? “நானும் கிறிஸ்தவன்தான். நான் படித்தது டோன் போஸ்கோ பள்ளியில். கல்லூரி படித்தது லயோலா கல்லூரியில். நான் காதலித்து திருமணம் செய்தது ஒரு கிறிஸ்தவ பெண்ணை. இதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்” என உதயநிதி ஸ்டாலின் சொன்னது மறந்துவிட்டதா? “என்னை உருவாக்கி இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க பாதிரிகள்தான். இந்த அரசு உங்கள் அரசு, உங்களால் உருவாக்கப்பட்ட அரசு, உங்களுக்கான அரசு. சமூக நீதி, திராவிட மாடல் என்று சொல்லுகின்ற இந்த அரசுக்கு, முழு மூல காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தான், கிறிஸ்தவ பாதிரிகள்தான். இது உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன். தம்பி இனிகோ இருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார். நீங்கள் தான் அஸ்திவார கற்கள். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இன்றைய தமிழகம்” என பேசியது தமிழக அரசின் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளாரே? என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.