டிஜிட்டல் சுகாதார சூழலியல்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை செயல்படுத்தும் நிறுவனமான தேசிய சுகாதார ஆணையம், தேசிய டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை ஏற்படுத்த உதவும் புதுமையான தீர்வுகளை உருவாக்க ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருக்கும் தங்கள் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டு அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவுவதுடன், பொது, தனியார் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பொது பொருட்களை கிடைக்கச் செய்வதற்கும் உதவிடும். டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பிற்குள் இயங்கக்கூடிய, டிஜிட்டல் கட்டுமானத் தொகுதிகளின் தொகுப்பாக ஒரு தடையற்ற ஆன்லைன் தளத்தை உருவாக்குவதை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய முயற்சி பாரதத்தில் உலகளாவிய சுகாதார தேவைகளின் இலக்குகளை விரைவுபடுத்தும் என்பதுடன், உலகளாவிய சுகாதார சூழல் அமைப்பிலும் முன்னோடியான விளைவுகளை ஏற்படுத்தும். இதுகுறித்து மேலும் தகவல் அறிய  https://abdm.gov.in/assets/uploads/eoi_docs/Open_Call_for_Expression_of_Interest_(EoI)_vF.pdf என்ற இணைப்பை அணுகலாம்.