டிஜிலாக்கர்

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொடர்புத்துறை ‘டிஜிலாக்கர்’ என்ற செயலியை வெளியிட்டுள்ளனர். இதனை கூகுள் ப்ளே ஸ்டோர் வழியே எளிதாக நம் கை பேசிகளில் பதிவிறக்கம் செய்து பத்திரமாக பாதுகாக்கலாம். இதுவரை ஒரு கோடி பேருக்கு மேல் இதனை உபயோகித்து வருகின்றனர். இதன்மூலம் 100க்கும் மேற்பட்ட முக்கிய மான ஆவணங்களை நம் கைபேசியிலேயே சேமித்து
வைக்கலாம்.
கைபேசியில் உள்ள மின்னணு நகலைக் காட்டினாலே, அவற்றின் அசல் ஆவணங்களைக் காட்டியதாக ‘சட்டபூர்வமாக’ அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும். இப்போது கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் கூட இறக்கம் செய்ய முடிகிறது. இது தவிர நம்முடைய தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களையும் பத்திரமாக சேமித்து வைக்க முடியும். கடந்த மாதம் என் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தபோது, RTO அலுவலகத்தில் புகைப்படம் எடுத்த சிறிது நேரத்திலேயே டிஜிலாக்கரில் உரிமத்தைப் பதிவிறக்க முடிந்தது. உரிம அட்டை இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் கிடைத்தது. இந்த செயலியை, பதிவிறக்கம் செய்த பின்னர், Account என்ற பகுதியைத் தொட்டு, கேட்கும் விவரங்களை அளித்து நமக்கு டிஜிலாக்கர் கணக்கைத் துவங்க வேண்டும்.

பிறகு Issued Document என்ற பகுதியில் ஆதார் கார்டு, PAN கார்டு போன்ற ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Uploaded Documents என்ற பகுதியில் நமது தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சேமித்துவைக்கலாம்.