தேவேந்திர குல வேளாளர் மசோதா

தமிழகத்தில், ‘தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி’ ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என, அழைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்த்தின், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவர்களால் பல அரசியல் கட்சியினர் லாபமடைந்தனரே தவிர, இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை யாரும் நிறைவேற்றவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்திருந்த போது, இது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் விழா ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘நான் நரேந்திரர், நீங்கள் தேவேந்திரர்’ என, குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.