மக்கள் சேவை விழா

மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி பிறந்த நாள் முதல் காந்தி ஜெயந்தி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழா கொண்டாட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. மக்களுக்கு சேவையாற்றும்படி அவர் எப்போதும் கூறுவார். அதனால் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம். இந்த நாட்களில் மக்களுக்கு சேவையாற்றப்படும். அரசுத் துறைகளில் நிலுவையில் உள்ள மக்கள் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்படும். இது குறித்து விரிவான அறிக்கையை அக்டோபர் 10ம் தேதிக்குள் அரசு துறைகள் மாநில அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம், பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் உதவி பெறாதவர்களுக்கு தேவையான உதவி, வருவாய் துறையில் நிலுவையில் உள்ள நில ஆவணங்கள், குறைந்த வருவாய் பிரிவினருக்கான சான்றிதழ்கள், ரேஷன்அட்டை விண்ணப்பங்கள், திருமண சான்றிதழ்கள், சொத்துரிமை மாற்றம், புதிய குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த மக்கள் சேவை விழா மூலம் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.