புதுச்சேரியைச் சேர்ந்த பாதிரி ஸ்டீபன் நித்யானந்தம், மற்றொரு போதகர் ஜான்சன் சகாயதாஸ் என்பவருடன் 2018ல் அறிமுகம் ஆனார். கோவையில் வசிக்கும் ஜான்சனின் தோழி ரமணி, கனடாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்துகிறார், அதன் மூலம் ஏழை மக்களை கனடாவுக்கு அனுப்பி அவர்களுக்கு வேலைவாய்ப்பும் குடியுரிமையும் பெற்றுத்தருகிறார் என்று கூறினார். கனடாவுக்கு ஆட்களை அனுப்ப ரூ. 10 லட்சம் செலவானாலும், அவர்கள் ரூ. 1 லட்சத்தை மட்டுமே பெறுவதாகவும் கனடாவில் பணிபுரியும்போது மீதியை சம்பளத்தில் பிடித்தம் செய்வதாகவும் கூறினார்.
தனது நண்பரின் வார்த்தைகளை நம்பிய பாதிரி ஸ்டீபன், தன்னுடன் சேர்த்து தனது சபையில் உள்ள 14 பேரை திரட்டி, தலா ரூ.1 லட்சம் கொடுக்கச்சொல்லி, ரூ.15 லட்சத்தை வழங்கினார். பின்னர் அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தி மேலும் அதிகமானோரை திரட்டினர். இதன் மூலம், 165 பேர் கனடா செல்ல ரூ. 1.65 கோடியை கொடுத்தனர்.
இந்தப் பணம் இலங்கைத் தமிழர்களான நிக்கோலஸ் செல்வக்குமார், கிருஷ்யானி, தமிழ்ச் செல்வன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு நீண்ட நாட்களாக எந்த தகவலும் வராததால் சந்தேகம் அடைந்தனர். தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு ஸ்டீபனை அணுகினர். அவர் பாதிரி ஜான்சனையும் இலங்கைத் தமிழர்களையும் அணுகியபோது அவர்கள் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்துவிட்டனர். தானும் மற்றவர்களும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிரி ஸ்டீபன், சி.பி.சி.ஐ.டி காவல்பிரிவில் புகார் அளித்தார். 2 கிறிஸ்தவ போதகர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை காவல்துறை தேடி வருகிறது.
கடந்த 2017ல், சேலத்தில் ஒரு பாதிரி, வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆவணங்களைத் தயாரிப்பதற்காக 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடி வசூலித்தும் வீடு கட்டிக்கொடுக்காமல் ஏமார்றினார்.
2020 டிசம்பரில், பாதிரி விக்டர் ஜேசுதாஸ், குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை தருவதாகக் கூறி, தினக்கூலி பணியாளர்களிடம் ரூ. 2.27 லட்சம் மோசடி செய்தார். ஜூன் 2020ல், திருநெல்வேலி, டி.என்.யில் உள்ள பாதிரி சார்லஸ், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ. 30 லட்சம் வசூலித்து ஏமாற்றினார். விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.