கிரிப்டோ கரன்சியை அனுமதிக்கலாம்

வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பங்கேற்ற முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.சி. கார்க், ‘பிட்காய்ன்’ போன்ற மெய்நிகர் நாணயங்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், ‘மெய்நிகர் நாணயங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த முழு தெளிவும் நமக்கு இன்னும் வரவில்லை என்று நான் கருதவில்லை. எனவே கிரிப்டோகரன்சி புழக்கத்தை அனுமதித்து அவற்றை கட்டுப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல்களை நாம் மேற்கொள்ள வேண்டும். வருக்காலத்தில் அதாவது, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அனைத்து இந்திய நிறுவனங்களும் டிஜிட்டல் கணக்குகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். தேசிய கணக்குகளுடன் நிறுவனத்தின் கணக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும். கணக்கியல் தரத்தை அதிகரித்து, தானியங்கி கணக்கியல் முறைக்கு செல்ல வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.