மதமாற்ற மோசடி

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அந்த மாநிலத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும், உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் தொடர்பான கொடூரமான வழக்குகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், துஃபைல் கான் என்ற மதரசா மதபோதகர், சந்திர சேகர் யாதவ் என்ற ஒரு ஹிந்து மனிதரை அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, அவரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளார். தகவல்களின்படி, 2013ம் ஆண்டில், ஷியாம் சிங் யாதவின் மகன் சந்திர சேகர் யாதவ், வேலை தேடி அம்ரோஹாவில் உள்ள நௌகாஜாவில் இருந்து டெல்லிக்கு சென்றார். ?ங்கு தங்கியிருந்த காலத்தில், ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காவுக்கு செல்லத் தொடங்கினார். அங்கு அவர் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மதீனா மசூதியில் வசிக்கும் மௌலானா துஃபைல் கானை சந்தித்தார். துஃபைல் அப்பகுதியில் மதரசா ஒன்றை நடத்தி வருகிறார். இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இதனை பயன்படுத்தி, சந்திரசேகருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், டெல்லியில் வீடு வாங்கித் தருவதாகவும், தனது மைத்துனியை திருமணம் செய்துத் தருவதாகவும் கூறி ஏமாற்றி அவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றினார். அவருக்கு வலுக்கட்டாயமாக விருத்தசேதனம் செய்தார். சந்திர சேகருக்கு ஒரு புதிய ஆதார் அட்டையை தயாரித்தார். அதில் அவருக்கு முகமது ஹிலால் என்று பெயர் மார்றினார். பின்னர் துஃபைல் கானின் மதரசாவில் அவர் அடைத்து வைக்கப்பட்டார், அங்கு அவர் நமாஸ் செய்யவும் மற்ற இஸ்லாமிய சடங்குகளை கடைபிடிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், சொன்னபடி, வேலை வாங்கித் தராமலும், திருமணம் செய்து வைக்காமலும் வீடு வாங்கித் தராமலும் துஃபைல் கான் ஏமாற்றினார். அதனை வலியுறுத்தியபோது, துஃபைல் கான் தலைமையிலான மதமாற்றக் கும்பல், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவரை அச்சுறுத்தியது. இதனால் பயந்துபோன சந்திர சேகர் வாய் திறக்காமல் மௌனமானார். 2022ம் ஆண்டில், முசாபர்நகரில் மௌலானா துஃபைல் மீது வேறொருவர் புகார் அளித்துள்ளார் என்பதை அறிந்த சந்திரசேகர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்ப முடிவு செய்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்ரோகா எஸ்.பி ஆகியோருக்கு அவர் புகார் கடிதம் எழுதினார். புகாரின் அடிப்படையில் மவுலானா துஃபைல் கான் மற்றும் அவரது மனைவி அஃப்ரீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மதத்தின் பெயரால் ஏமாற்றப்பட்ட சந்திர சேகர், அதனை உணர்ந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பி மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்பினார்.