ஹிந்து கோயில்களில் இஸ்லாமிய சடங்குகளுக்கு ஆதரவில்லை

ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் உள்ள ஹிந்து கோயில் வளாகத்தில் முஸ்லிம் ஜோடிக்கு முஸ்லிம்கள் முறைப்படி திருமணம் நடந்த ஒரு நாள் கழித்து, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் பிரிவு ஹிந்து கோயிலில் நிக்காஹ் விழாவை ஆதரிக்கவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முன்னதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தும் தாக்கூர் சத்யநாராயண் கோவில் வளாகத்தில் தான் இந்தத் திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து கோயிலில் நடத்தப்படும் இஸ்லாமிய சடங்குகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வி.ஹெச்.பியால் நிர்வகிக்கப்படும் தாக்கூர் சத்யநாராயண் கோயிலில் திருமணம் நடந்தது, ஆனால் கோயிலை உள்ளூர் கோயில் அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தான், மத சடங்குகள், தினசரி கோயில் விவகாரங்களை நடத்துகிறார்கள். ஹிந்து சமூகத் திருமணங்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகளுக்காகவும் கோயிலின் வளாகம் வாடகைக்கு விடப்படுகிறது. சமீபத்தில் கோயிலில் நடத்தப்பட்ட நிக்காவுக்கும் வி.ஹெச்.பிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோயில் வளாகத்தில் இஸ்லாமிய சடங்குகள் நடத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். இச்சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஹிந்துக் கோயிலில் ஹிந்து சடங்குகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வி.ஹெச்.பி, கோயில் அதிகாரிகளை இந்த உண்மையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதுடன், எதிர்காலத்தில் கோயிலில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வி.ஹெஸ்.பி ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.