தொடரும் முத்தலாக்

மத்தியப் பிரதேசம் இந்தூரில் வசிக்கும் முகமது காலித் குரேஷி என்பவர் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். காலித், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த ஜாஹிதா, அது குறித்து காலித்திடம் கேட்டதால் ​​​​அவர் தன் மனைவியிடம் மோசமாக நடக்கத் தொடங்கினார். இதையறிந்த ஜாஹிதாவின் குடும்பத்தார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் கோபமடைந்த காலித் ஜாஹிதாவுக்குமுத்தலாக் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேற்றினார். தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து, ஜாஹிதா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். காவல்துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆகஸ்ட் 2017ல் உச்ச நீதிமன்றம் முத்தலாக் நடைமுறையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2019ல் முத்தலாக் நடைமுறையை கிரிமினல் குற்றமாக மாற்றும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.  முத்தலாக் சட்டத்தால் அந்த கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்க இயலும் என்ற போதிலும் ஒரு பிரிவினர் சட்டவிரோதமாக முத்தலாக்கை இன்றுவரை தொடர்கின்றனர்.