சொந்த கட்சியினரே கண்டனம்

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்காத விவகாரம், அதற்கு அவர் சொன்ன பொருந்தாத காரணங்கள் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அவரது கருத்து சமூக வலைத்தளவாசிகளால் எள்ளி நகையாடப்படுகிறது. இதனால், அவர் கோபமடைந்து சொன்ன வார்த்தைகள் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. அது அவரது பதவிக்கே வேட்டு வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும், தியாகரானால் தி.மு.கவினர் முதல்வர் ஸ்டாலின் குறித்து கட்டமைத்து வரும் போலி பிம்பமும் உடைய ஆரம்பித்துள்ளது.

தியகராஜனை சிபாரிசு செய்த ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் இவரால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தி.மு.க மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு கண்டிப்பாக சென்றிருக்க வேண்டும். இதை புறக்கணித்தால் தமிழக நலன் பாதிக்கும். அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார், தொடர்ந்து ஊர் வம்பை இழுப்பது சரியல்ல’ என தன் சொந்த கட்சியின் மாநில நிதியமைச்சருக்கு குட்டு வைத்துள்ளார்.

இளங்கோவனின் இந்த கருத்தால் ஆத்திரம் அடைந்த பழனிவேல் தியாகராஜன், ‘கிழ முட்டாள் (2 இறாலுக்கு விலை போகக்கூடியவர்), கட்சியின் அடுத்தடுத்த இரு தலைவர்களால் 2 கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர். உளறுகிறார்’ என டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனையடுத்து கட்சியில் சலசலப்பு எழுந்தது. இதனையடுத்து அப்பதிவை நீக்கிவிட்டார் தியாகராஜன்.