மத வெறுப்புணர்வு பேச்சு சபாநாயகர் மீது புகார்

திருநெல்வேலி:ஹிந்துக்கள் மனம் புண்படும்படியும் மதவெறுப்புணர்வை துாண்டும் வகையிலும் பேசிய சபாநாயகர் அப்பாவு மீது, திருநெல்வேலி மாநகர போலீசில், ஹிந்து முன்னணி மாவட்டச் செயலர் விமல் புகார் அளித்துள்ளார்.

புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

திருநெல்வேலி சவேரியார் பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்வில், சபாநாயகர் அப்பாவு பேசினார்.

அப்போது அவர், ’96 சதவீத ஹிந்துக்களுக்கு கல்வியை மறுத்தது தான் சனாதனம். 4 சதவீத மக்களுக்கு கல்வி கற்க அனுமதி உண்டு; மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும் என்பது தான் சனாதனம்’ என்ற வகையில் பேசினார்.

ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஹிந்து முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.