கே.எஸ்.அழகிரியின் கல்லூரி மோசடி

கடலூர், சிதம்பரத்தில் உள்ள ‘பெருந்தலைவர் காமராஜர் கடல் அறிவியல், பொறியியல் கல்லூரி’ தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ‘கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி, தொண்டு அறக்கட்டளை’யால் நிர்வகிக்கப்படுகிறது. முறையான விதிகள் பின்பற்றாததால், கடந்த ஜனவரியில், ஐந்து ஆண்டுகள் கல்லூரியின் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்தது கப்பல் போக்குவரத்துத்துறை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது. கல்வி கட்டணம் ஒன்றரை கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கே.எஸ்.அழகிரி குடும்பத்தினர் மீது நடவடிக்கை, 50% கல்வி கட்டணம் திரும்ப வழங்குதல், நஷ்ட ஈடு போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.