வன்முறையாளர்களிடம் வசூல்

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பாரதத்தின் பல மாநிலங்களில் திட்டமிட்ட வகையில் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டது வன்முறையாளர்கள் ரயில், பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். ஏராளமான பொதுச்சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இந்நிலையில், இந்த சேதத்துக்கான தொகையை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி பேசிய வாரணாசி மாவட்ட ஆட்சியர் கௌஷல் ராஜ் சர்மா, வாரணாசி மாவட்டத்தில் ஜூன் 17 அன்று வன்முறையாளர்கள் 36 பேருந்துகளை எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு, 12.97 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதத்தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களை எரித்த 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடைய புகைப்படங்களும், வீடியோ ஆதாரங்களும் பிரயாக்ராஜ் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.